Thursday, March 12, 2020

குடிநீர் சுத்திகரிப்பு


தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்

Image result for mud pot water                                                               

1. மண் பானையில் குடிதண்ணீரை  இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் ஊற்றி வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. பிராண சக்தியும் அதிகரிக்கும். உலகத்திலேயே மிகச் இயற்கையான சிறந்த வாட்டர்  ஃபில்டர் மண் பானை ஆகும்

2. வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் ஒரு தண்ணீரை வடி கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டு செய்யும் வைரஸ் , பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்கும் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடிகட்டிய நீரில் குளிப்பாட்டி குணப்படுத்தியிருக் கிறார்கள்

3.நாம் சாப்பிடும் சாதாரண வாழை பழத் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு வெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோல் மண் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள் களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறது. ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும். எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும்.  

Image result for copper vessel water4. செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலம் சுத்தப்படுத்தலாம். செம்பு மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீரில் உள்ள விஷத்தன்மை கூட அழிக்கப்படுகிறது. அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும்

வாழ்வோம் ஆரோக்கியமாக !

No comments:

Post a Comment

Only a visitor-sufi story